பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு திட்டம்: எப்போது தொடங்குகிறது? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 27, 2019

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு திட்டம்: எப்போது தொடங்குகிறது?

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கிறார்.


தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை  நவம்பர் 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடக்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நியாய விலைக் கடையில் அரிசி பெறும் அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சியில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.




கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் புதிய மாவட்டத்தைத் தொடக்கி வைத்தும், ரூ.243 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.




தமிழகம் வறட்சியாக இருந்த நிலையில், கடந்த தைப் பொங்கல் பண்டிகையின்போது, ரூ.1,000 தொகையுடன் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. தற்போது, மழை பெய்து வளமாக இருந்தாலும், வருகிற பொங்கல் பண்டிகையையும் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக, அரிசி அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா் முதல்வா்.


இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இந்த திட்டம் நவம்பர் மாத இறுதியிலேயே தொடக்கி வைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment