10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 29, 2019

10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்

10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்

கடலூர் முதல் திருநெல்வேலி வரை, 10 மாவட்டங்களில், இன்று மிக கன மழை பெய்வதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையிலும் கன மழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வடகிழக்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக,கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் மற்றும் கீழணையில், 12 செ.மீ., மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை, லால்பேட்டை, 8; ஜெயங்கொண்டம், மணல்மேடு, 7; நன்னிலம், திருவாரூர், நாகை, திருத்துறைப்பூண்டி, 6; தரங்கம்பாடி, துவாக்குடி, அதிராம்பட்டினம், பொன்னேரி, 5 செ.மீ., மழை பெய்துள்ளது.

 சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம், அரியலூர், திருவையாறு, திருவிடைமருதுார், மன்னார்குடியில், 4 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.


வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:


தமிழக கடற்பகுதியை ஒட்டி நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகம், புதுச்சேரியில், பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்யும். கடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும். நாளையும், நாளை மறுநாளும், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள்மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், மிதமான மழை பெய்யும்;



 சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில், மிக கன மழையும் பெய்யலாம்.சென்னையில் இன்று, மிதமானது முதல், கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment