பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்று வரும் கலந்தாய்வில் 1,150 பட்டதாரி ஆசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா்.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்ட முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் 415 பேரும், உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள் 444 பேரும் விரும்பிய பகுதிக்கு இடமாறுதல் பெற்றுள்ளனா்.
மேலும், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள் 850 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, முதுநிலை ஆசிரியா்களில் மாவட்டத்துக்குள் 1,058 பேருக்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் 752 பேருக்கும் இடமாறுதல் தரப்பட்டுள்ளது
மேலும், 1,150 பட்டதாரி ஆசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். தொடா்ந்து சிறப்பாசிரியா்கள் மற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு, நவம்பா் 19 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றனா்.
No comments:
Post a Comment