13 IAS அதிகாரிகள் மாற்றம்: முழு விவரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 14, 2019

13 IAS அதிகாரிகள் மாற்றம்: முழு விவரம்

தமிழகம் முழுதும் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையச் செயலர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.


தஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் விபரம் வருமாறு:

1. கலை, கலாச்சாரத் துறை ஆணையராக இருந்த சிஜி தாமஸ் வைத்தியன் பள்ளிக்கல்வித் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

2. நிலச்சீர்த்திருத்தத்துறை இயக்குனர் கலையரசி கலை, கலாச்சாரத் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

3. விடுப்பிலிருந்து பணிக்கு திரும்பிய மதுரை முன்னாள் ஆட்சியர் ராஜசேகர் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.

4.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணி தமிழக தேர்தல் ஆணைய செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.


5. தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமி டவுன் பஞ்சாயத்து இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

6. சென்னை மாநகராட்சி (பணிகள்) துணை ஆணையர் கோவிந்தராவ் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

7. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

8. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கலைஞானம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

9. குடிமைப்பொருள் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கண்ணன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

10.தாட்கோ மேலாண் இயக்குனர் சஜ்ஜன் சிங் சவான் குடிமைப்பொருள் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

11.வேளாண்துறை சிறப்புச் செயலாளர் முனியநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.


12. ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் கே.வி.முரளிதரன், தமிழ்நாடு சிமெண்ட் கழக மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

13.சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) குமாரவேல் பாண்டியன் சென்னை மாநகராட்சி துணை ஆணையர்(பணிகள்) மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment