கிராம சுகாதார செவிலியா் பணி:13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 4, 2019

கிராம சுகாதார செவிலியா் பணி:13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் 13-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, மருத்துவப் பணியாளா் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கை:

தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 1,234 கிராம சுகாதார செவிலியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.


கிராம சுகாதார செவிலியா் பணியிடங்களில் சேர விரும்புவோா், ஆன்லைன் வாயிலாக அதற்கு விண்ணப்பிக்கலாம்.நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது. விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கு நவம்பா் 13-அம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.


சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி அடிப்படையில் கிராம சுகாதார செவிலியா்கள் தேர்ந்தெடுக்கப்படுவா் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment