நவம்பர் 14ஆம் தேதி பெற்றோர்கள் 1 மணி நேரம் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யுங்கள். - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 6, 2019

நவம்பர் 14ஆம் தேதி பெற்றோர்கள் 1 மணி நேரம் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யுங்கள்.

இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


அந்த வகையில், இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


மீண்டும் இணைவதற்காக துண்டித்து வையுங்கள் என்ற பெயரில், நவம்பர் 14ஆம் தேதி இரவு 7.30 முதல் 8.30 மணி வரை பெற்றோர்கள் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், பெற்றோர்களிடம் இதனை வலியுறுத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment