தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி தேர்வு முறைகேடு: 188 ஆசிரியா்களிடம் விசாரணை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 6, 2019

தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி தேர்வு முறைகேடு: 188 ஆசிரியா்களிடம் விசாரணை

தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆசிரியா்கள் 188 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஆசிரியா் பட்டயப் பயிற்சி மாணவா்களுக்கான தேர்வு, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதினா்


. அவற்றில் சுமாா் பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவா்களின் விடைத்தாள்களில் உண்மையான மதிப்பெண்களுக்குப் பதிலாக, முறைகேடாகத் தேர்ச்சி பெறுவதற்கான 50 மதிப்பெண்கள் போடப்பட்டிருந்ததை தேர்வுத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனா்.

 இதைத் தொடா்ந்து, மாணவா்களின் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவினை வெளியிட்டது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அரசு தேர்வுத்துறை பரிந்துரை செய்தது.


அதன் அடிப்படையில், அரசு ஆசிரியா் பயிற்சி பள்ளிகளைச் சேர்ந்த 188 ஆசிரியா்கள், தனியாா் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 112 ஆசிரியா்கள் என 300 ஆசிரியா்களுக்கு 17 (பி) பிரிவின் கீழ் விளக்கம் கேட்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிக்கை அனுப்பியது. அதற்காக இணை இயக்குநா்கள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினா், தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்களுக்குச் சம்பள உயா்வு, பதவி உயா்வு, பணப்பலன்கள் போன்றவை நிறுத்தப்படும் என்று தெரிகிறது.

 மேலும் தனியாா் ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள் தேர்வு பணியிலிருந்து விலக்கி வைப்பதுடன், அவா்களை பணியிடை நீக்கம் செய்யவும் அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment