எங்கள் போன்களை ஹேக் செய்தால் 1 மில்லியன் டாலர் பரிசு!' -இது கூகுளின் ஆஃபர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 25, 2019

எங்கள் போன்களை ஹேக் செய்தால் 1 மில்லியன் டாலர் பரிசு!' -இது கூகுளின் ஆஃபர்

இன்று ஸ்மார்ட்போன் என்றாலே ஆண்ட்ராய்டுதான் முதலில் நினைவுக்கு வரும். அந்த ஆண்ட்ராய்டை வடிவமைக்கும் நிறுவனம் கூகுள். இந்த நிறுவனம் சில வருடங்களாகச் சொந்தமாக ஸ்மார்ட்போன்களும் தயாரித்து வருகிறது. அப்படி தான் தயாரிக்கும் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களை ஹேக் செய்பவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் வரையிலான பரிசுகளை அறிவித்துள்ளது கூகுள்.




இந்த அறிவிப்பின்படி, கூகுளின் பிக்ஸல் 3 மற்றும் பிக்ஸல் 4 ஸ்மார்ட்போன்களை நூதன முறையில் ஹேக் செய்பவர்களுக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்படும். இந்தப் பரிசை வெல்ல இந்த போன்களில் இருக்கும் டைடன் எம் என்ற பாதுகாப்பு சிப்பை முறியடிக்க வேண்டியிருக்கும்.

 இது ஆப்பிள் ஐபோனின் பாதுகாப்பு சிப்களுக்கு இணையான ஒரு பாதுகாப்பு சிப்.உதாரணத்துக்கு ஹேக்கர் ஒரு மால்வேரை ஆண்ட்ராய்டு மொபைலில் ஏற்றப் பார்க்கிறார் என்றால் உடனடியாக ஆப்களின் பாஸ்வோர்டை இது பாதுகாக்கும்.

பிக்ஸல் போன் Pixel Phone

இதனுடன் கூடுதலாக ஆண்ட்ராய்டின் Developer preview-ல் இருக்கும் கோளாறுகளைக் கண்டுபிடித்தால் $1.5 மில்லியன் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. மொபைலில் உள்ள தகவல்களைத் திருடுதல் மற்றும் லாக் ஸ்க்ரீன் பை-பாஸ் போன்ற குறிப்பிட்ட வகையான தாக்குதல்களுக்கு 5,00,000 டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதைப் போன்றதொரு போட்டியை ஆப்பிள் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்திருந்தது.



நவம்பர் 21-லிருந்து ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே இந்த அதிக பரிசுத் தொகை செல்லும். எதற்கெல்லாம் என்ன பரிசுத் தொகை என்பதைக் கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பரிசுத் திட்டத்தின் விதிமுறை பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

 இவை அனைத்தும் தற்போது வரை அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பிக்ஸல் மொபைல்களுக்கு மட்டுமே பொருந்தும்.

No comments:

Post a Comment