வரும் 22, 23ம் தேதி வேலைவாய்ப்பு பதிவு முகாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 18, 2019

வரும் 22, 23ம் தேதி வேலைவாய்ப்பு பதிவு முகாம்

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: இங்கிலாந்து நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர், டிப்ளமோ, பிஎஸ்சி நர்ஸ் போன்ற பணியாளர்களை பணியமர்த்தும் பொருட்டு IELTS பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. 


ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி தனியார் நிறுவனத்தில் பணிபுரிய 21 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட எலக்ட்ரீசியன், எலக்ட்ரிக்கல் டெக்னீசியன், ஓஎச் லைன்மேன் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். 

மேலும் 21 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட ஐடிஐ தேர்ச்சி பெற்று 2 வருட பணி அனுபவமுள்ள பிட்டர்ஸ் பெருமளவில் தேவை. மாத ஊதியம் ₹28,000. சவுதிஅரேபியா நாட்டிற்கு  டிப்ளமோ படித்த ஆண்கள், பிஎஸ்சி நர்ஸ்கள் தேவை.



வேலைவாய்ப்புக்கான பதிவு முகாம் வருகிற 22ம் தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய 2 நாட்கள் மாவட்ட  வேலைவாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,  மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர், கோயம்பத்தூர்அலுவலகத்தில் காலை 9 முதல் மாலை 4  மணி வரை நடைபெற உள்ளது

No comments:

Post a Comment