காற்று மாசு சுகாதார அவசர நிலையை நோக்கி மோசமடைந்து வருவதால், பள்ளிகளுக்கு வியாழன், வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக தில்லி அரசு புதன்கிழமை அறிவித்தது.
இதேபோல், நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட என்சிஆரிலும் பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
காற்று மாசுவைக் கட்டுப்படுத்த உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இந்த அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டன
No comments:
Post a Comment