2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு கிலோ அரிசி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 4, 2019

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு கிலோ அரிசி

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு பசுமை தாயகம் சார்பில் ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள  அறிக்கையில்,


பிலிப்பைன்ஸ் நாட்டிலும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் சில இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் அரிசி கொடுக்கும்  திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


அந்த வகையில் தமிழ்நாட்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை  தெரிவித்துள்ள ராமதாஸ், மாவட்டத் தலை நகரங்களில் வரும் 9, 10 மற்றும் 16, 17 ஆகிய நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் முகாம்கள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.


அதன் மூலம் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment