இந்திய அஞ்சல் துறையில் 3650 பணியிடங்களுக்கான அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 12, 2019

இந்திய அஞ்சல் துறையில் 3650 பணியிடங்களுக்கான அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையின் மகாராஷ்டிரா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 3650 'கிராமின் டக் சேவாக்' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 3650


பணி: BRANCH POSTMASTER (BPM)

பணி: ASSISTANT BRANCH POSTMASTER (ABPM)

பணி: DAK SEVAK


வயதுவரம்பு: 01.11.2019 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் உள்ளூர் மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும்.மேலும் குறைந்தபட்சம் 60 நாட்கள் கால அடிப்படையிலான கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து தகுதியானவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை வங்கிகளின் பண பரிவர்த்தனை அட்டைகளை பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/Maharashtra-14.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2019

No comments:

Post a Comment