ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்க்கும்4 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை, உச்சநீதிமன்றம் இம்மாதம் அறிவிக்க உள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வுபெற உள்ளார். அவரை தொடர்ந்து நீதிபதி சரத் அரவிந்த், அடுத்த தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் கோகாய் தனது ஓய்வுக்கு முன்னதாக 10 நாட்கள் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவும், தீர்ப்புகளை வழங்கவும் உள்ளார். அதன் படி, வரும் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரையும், 11ம் தேதி முதல் 15ம் தேதி வரையும், ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொள்ளவும், தீர்ப்புகளை வழங்கவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு 4 முக்கிய வழக்குகள் தீர்ப்புக்காக நிழுவையில் உள்ளன.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நில வழக்கில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அரோரா, சன்னி வக்பு வாரியம், ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் உரிமை கோரும் வழக்கை விசாரித்த அலஹாபாத் உயர்நீதிமன்றம், 2.77 ஏக்கர் நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக்கொள்ளத் தீர்ப்பளித்தது
. இதை எதிர்த்து 14 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தினமும் விசாரணை நடத்தி, தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்துள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு இம்மாதம் வெளியாக உள்ளது.
அதைப்போலவே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 65 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் இம்மாதம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
அதைப்போலவே, மத்திய அரசு பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறிய சீராய்வு மனு மீதும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பான மனு மீதும் விசாரணை முடிவுற்று, வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இம்மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்த 4 வழக்கின் தீர்ப்புகளும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
அதேநேரம், வெறும் 10 நாட்களே நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது பணியை மேற்கொள்ள உள்ளார் என்பதால், இது உச்சநீதிமன்ற வரலாற்றில் புதிய மைல் கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment