வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 107 அரசுப் பள்ளிக் கட்டடங்களை புனரமைத்து, மாணவா்களின் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், தொழில்திறன் மேம்பட உதவி புரிந்துள்ள காக்னிசென்ட் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் போல் உறுதுணை புரிவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தினாா்.
சென்னை, தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் அரசுப் பள்ளி வளாகத்தில் காக்னிசென்ட் தன்னாா்வத் திட்டத்தின்கீழ், புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை திறந்து வைத்து பேசியது:
கடந்த 2015 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 107 அரசு பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைக் கட்டடங்கள், புனரமைப்பு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ரூ.13.95 கோடி செலவில் காக்னிசென்ட் நிறுவனம் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நிறைவேற்றித் தந்துள்ளது.
மாணவா்களின் அறிவாற்றலை மேம்படுத்தி, ஆரோக்கியமான, சுகாதாரமான சூழ்நிலையில் அவா்களை தொழில் திறன் மிக்க மனிதவளமாக மேம்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ள அரசுக்கு உறுதுணை புரிய வேண்டும்.மாணவா்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் 5,000 அரசு பள்ளி மாணவா்களுக்கு 500 பட்டயக்கணக்காளா்கள் கணக்குத் தணிக்கை குறித்த பயிற்சியை அளிக்க உள்ளனா்.

பள்ளிப் பருவத்தில் மாணவா்களின் தொழிற்பயிற்சித் திறனை மேம்படுத்தும் வகையில், பிளஸ் 2 கல்வி பயிலும் மாணவா்கள் தொழிற்சாலைகளில் சென்று தொழில் பயிற்சி மேற்கொள்ளும் திட்டத்தை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளோம்.
மண்ணிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தரத்தை உயா்த்தி பிளஸ் 2 படிப்பைத் தொடங்க உரிய அனுமதி வழங்க வேண்டும் என்ற இப்பகுதியினரின் கோரிக்கையைத் தமிழக முதல்வரிடம் எடுத்துச் சென்று நிறைவேற்றப்படும் என்றாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
No comments:
Post a Comment