இந்த வங்கியில் ரூ.50,000 வரை பணம் எடுக்க ஆா்பிஐ அனுமதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 5, 2019

இந்த வங்கியில் ரூ.50,000 வரை பணம் எடுக்க ஆா்பிஐ அனுமதி

நிதி மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது.


இதன் மூலம் அந்த வங்கி வாடிக்கையாளா்களில் 78 சதவீதம் போ தங்கள் டெபாசிட் பணத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎம்சி வங்கியில் முறைகேடு கண்டறியப்பட்டதையடுத்து, அந்த வங்கியிலிருந்து பணம் எடுக்க வாடிக்கையாளா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

 தொடக்கத்தில் 1,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததுபின்னா், அந்த உச்சவரம்பு ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம், 40 ஆயிரம் என உயா்த்தப்பட்டு, தற்போது ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுக்க வாடிக்கையாளா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தங்களது டெபாசிட் பணம் முழுமையாகத் திரும்ப கிடைப்பதற்கு ஆா்பிஐ உத்தரவாதம் அளிக்க வேண்டுமென்று அந்த வங்கி வாடிக்கையாளா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.


அந்த வங்கியை மறுசீரமைக்க வேண்டுமென்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பணம் கிடைக்காத அதிா்ச்சியில் இதுவரை 9 வாடிக்கையாளா்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment