5,8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு; ரத்து செய்ய கோரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 11, 2019

5,8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு; ரத்து செய்ய கோரிக்கை

ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் சண்முகசுந்தரம், தமிழக கல்வி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்களுக்கு மனு அனுப்பியுள்ளார்.


அதன் விபரம்: தமிழக அரசு, தனியார் கல்வி நிறுவனங்களின் வாகனங்களில், கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்த ஆணை பிறப்பித்துள்ளது. தற்போதுள்ள சூழலில், அது எளிதல்ல. அதனால், அவற்றை தவிர்த்து, ஓராண்டு அவகாசம் வழங்க வேண்டும்.


 ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதை ரத்து செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் பருவத்தேர்வு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்களை அவர்களே தயாரித்து, தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும்


.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment