ரூ .59 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 18, 2019

ரூ .59 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை


தமிழக அரசு நிறுவனமும் மற்றும் இந்தியாவின் முதன்மையான மாநில அளவிலான நிதி நிறுவனமுமான தமிழ்நாடு தொழில் முதலிட்டூக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள மேலாளர், முதுநிலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 39

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: மேலாளர் (தொழில்நுட்பம்)
காலியிடங்கள்: 05

பதவி: மேலாளர் (நிதி)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.56,900 - 1,80,500


பதவி: முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்)
காலியிடங்கள்: 10

பதவி: முதுநிலை அலுவலர் (நிதி)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், பிசி, எம்பிசி, டிசி மற்றும் பிசிஎம் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 32க்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 40க்குள்ளும் இருக்க வேண்டும்.தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், சிஏ, ஐசிடபுள்ஏ மற்றும் நிதியியல் பிரிவில் எம்பிஏ, எம்.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறைந்தபட்சம் 3 மற்றும் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, பிசி, பிசிஎம், எம்பிசி மற்றும் டிசி, டிஏபீ பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.800 + 18 சதவீதம் ஜிஎஸ்டி, மற்ற பிரிவினர் ரூ.400 + 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: www.tiic.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tiic.org/Recruitment_Notification_2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.12.2019. தேர்வு மையம் குறித்த தகவல் பதிவிறக்கம் செய்யப்படும் நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.12.2019
Click here to download more details

No comments:

Post a Comment