பிரதமர் மோடிக்கு 5ம் வகுப்பு தமிழக மாணவன் கடிதம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 13, 2019

பிரதமர் மோடிக்கு 5ம் வகுப்பு தமிழக மாணவன் கடிதம்

நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மன் கி பாத் நிகழ்ச்சியில் பேச வேண்டும்' என, ஐந்தாம் வகுப்பு மாணவர் ஆகாஷ், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம், படூரை சேர்ந்தவர் ஆகாஷ் ஆனந்தனின் மகன் ஆகாஷ், 10; ஐந்தாம் வகுப்பு மாணவர். இவர், மதுவிற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், படூரில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிராக, போராட்டம் நடத்தினார்.இதன் விளைவாக கடையை மூட, கலெக்டர் உத்தரவிட்டார்.

 தொடர்ந்து மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து, பல்வேறு கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.தமிழகம் உள்பட, நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, இவர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, ஆகாஷ் கூறியதாவது


:நாடு முழுவதும், பூரண மது விலக்கு வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்பது குறித்து, மன் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் உரையாற்ற வேண்டும்.

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து, 8, 9ம் வகுப்பில், பாடமாக வைக்கும் வகையில், பாடத்திட்டம் உருவாக்க வேண்டும் என, அந்த கடிதத்தில் வலியுறுத்தி உள்ளேன்.


இந்த கடிதத்தை பிரதமருக்கு மட்டுமின்றி, தமிழக முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்களுக்கும் அனுப்பி உள்ளேன். குழந்தைகள் தினமான இன்று, 500க்கும் மேற்பட்ட கடிதங்களை, தபாலில் அனுப்ப உள்ளேன்.இன்னும் கடிதங்களை, இன்று குழந்தைகள் தின விழாவில், தபாலில் அனுப்ப உள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment