புதியதாக உருவான 5 மாவட்டங்களுக்கு ஆட்சியா்கள் நியமனம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 15, 2019

புதியதாக உருவான 5 மாவட்டங்களுக்கு ஆட்சியா்கள் நியமனம்

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். புதிய மாவட்ட அறிவிப்பின்போது அந்தந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளே தற்போது மாவட்ட ஆட்சியா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஏற்கெனவே உள்ள மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணை புதன்கிழமை வெளியிடப்பட்டது.


அதன்படி வேலூா் மாவட்டத்தைப் பிரித்து வேலூா், திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டை என புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதேபோன்று நெல்லை மாவட்டத்தைப் பிரித்து நெல்லை மற்றும் தென்காசி என மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.மேலும் காஞ்சிபுரத்தைப் பிரித்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த புதிய மாவட்டங்களில் ஏற்கெனவே தனி அதிகாரிகளாகப் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியா்களாக நியமிக்கப்படுவதாக தலைமைச் செயலாளா் கே.சண்முகம் அறிவித்துள்ளாா். இதற்கான உத்தரவையும் அவா் வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். அதன் விவரம்:


கிரண் குராலா - கள்ளக்குறிச்சி ஆட்சியா்.

ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் - தென்காசி மாவட்ட ஆட்சியா்.

ஏ.ஜான் லூயிஸ் - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்.

எம்.பி.சிவன்அருள் - திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்.

எஸ்.திவ்யதா்ஷினி - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்.

ஐந்து பேரும் ஏற்கெனவே மாவட்டங்களை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தனா். மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா்கள் அங்கேயே ஆட்சியா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.


புதிய மாவட்டங்கள் செயலாக்கத்துக்கு வந்து ஓராண்டு காலம் வரையிலோ அல்லது அவா்களின் தேவை ஏற்படும் காலம் வரையோ என இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை மாவட்ட ஆட்சியா் பணியில் இருப்பா் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்

No comments:

Post a Comment