இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த ஆறு ஆண்டுகளில் வேலையிழப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது.
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் புதிய வேலை வாய்ப்புக்கள் குறைந்தது மட்டுமின்றி ஏற்கனவே பணியில் இருந்தவர்களும் வேலைகளை இழந்ததும் ஒரு காரணமாகும். இந்த வேலை இழப்பு குறித்து அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் ஒரு ஆய்வு நடத்தி உள்ளது.
அந்த ஆய்வில் காணப்படுவதாவது :
க்டந்த 2011-12 ம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தமாக 47.4 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்று இருந் தனர். அந்த எண்ணிக்கை 2017-18 ஆண்டில் 46.5 கோடியாக குறைந் துள்ளது.
இந்திய வரலாற்றில் இந்த அளவிலான வேலையிழப்பு ஏற்பட்டு இருப்பது இதுவே முதன் முறை என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த 6 ஆண்டு காலகட்டத்தில் சராசரி யாக ஒவ்வொரு ஆண்டும் 26 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
கடந்த 2004-05 ஆண்டில் சுமார் 45.9 கோடி நபர்கள் வேலை வாய்ப்புடன் இருந்தனர். அது 2011-12 ஆண்டில் 47.4 கோடியாக உயர்ந்தது. ஆனால் அதே எண்ணிக்கை கடந்த 2017- 18-ல் 46.5 கோடியாக குறைந் துள்ளது.
அதாவது இந்த கால இடைவெளியில் வேளாண் தொடர்புடைய துறை யில் வேலைவாய்ப்பு 49 சதவீதத்தில் இருந்து 44 சதவீதமாகவும், உற்பத்தி துறையில் 12.6 சதவீதத்தில் இருந்து 12.1 சதவீதமாகவும் குறைந்துள்ளது. அதாவது இந்த காலகட்டத்தில் உற்பத்தி துறையில் 35 லட்சம் அளவில் வேலை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அது மட்டுமின்றி கட்டுமானத் துறையிலும் வேலைவாய்ப்பு கணிசமான அளவில் குறைந்துள்ளது. கடந்த 2004-05 முதல் 2011-12 வரையிலான கால கட்டத்தில் ஆண்டுக்கு 40 லட்சம் வேலைவாய்ப்புகள் கட்டுமானத் துறையில் உருவாக்கப்பட்டன.அதே வேளையில் 2011-12 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் அளவிலேயே அந்த துறையில் வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு குறைவது மிக ஆபத்தா னது. ஏனென்றால் அது உற்பத்திக் குறைவால் உண்டாவதாகும். உற்பத்திக் குறைவு என்பது நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் மோசமான அளவில் பாதிக்கும். எனவே நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உற் பத்தி துறையின் வளர்ச்சி மிக அவசியமானது ஆகும்.
எனவே மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, ஏழ்மையைக் குறைக்க உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது தற்போதைய தேவை ஆகும். உள் நாட்டு உற்பத்தியைப் பெருக்க இந்த துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பது மிக மிக அவசியம் ஆகும்.
சேவை துறையில் மட்டும் இந்த கால கட்டத்தில் ஓரளவு வேலைவாய்ப்பு உருவாகி உள் ளது. சேவைத் துறையில் ஆண்டுக்கு 30 லட்சம் வேலை வாய்ப்பு உருவாகி உள்ளது. அதே வேளையில் அந்த வேலை வாய்ப்புக்கள் ஊதிய அளவிலும், பணிச் சூழல் அடிப்படையிலும் மிக மோசமான தரத்தில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment