தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் ஆண்டுக் கட்டணம் ரூ.8 லட்சத்துக்குள் குறையும் வாய்ப்பு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 22, 2019

தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் ஆண்டுக் கட்டணம் ரூ.8 லட்சத்துக்குள் குறையும் வாய்ப்பு!

மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை ஆணையம் அனுப்பியிருக்கும் பரிந்துரைக்கு ஒரு வேளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பயில்வதற்கான ஆண்டுக் கட்டணம் குறையும் வாய்ப்பு ஏற்படும்.

அதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பயில ஆண்டுக் கட்டணம் ரூ.8 லட்சத்துக்குள்ளும், மருத்துவ முதுகலைப் பயில ஆண்டுக்கு தற்போது மாணவர்கள் செலுத்தும் தொகையில் 90% அளவுக்குக் குறைவாக செலுத்தும் நிலையும் ஏற்படலாம்.


இந்த கட்டண முறை, ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரியிலும் மத்திய அரசு ஒதுக்கீட்டுக்கான 50% மாணவர் சேர்க்கை இடங்களுக்கு பொருந்தும்

தற்சமயம், எம்பிபிஎஸ் பயில தனியார் கல்லூரிகளில் ரூ.30 லட்சம் முதல் ரூ.1.2 கோடி வரையும், எம்.எஸ். மற்றும் எம்.டி. பயில ரூ.1 முதல் 3 கோடிகள் வரையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தில்லி-எய்ம்ஸ், ராணுவப் படை மருத்துவக் கல்லூரி - புணே, ஆகியவற்றில் நிர்ணயிக்கப்படும் கல்விக் கட்டணத்தை ஆராய்ந்த பிறகே இந்த பரிந்துரையை செய்துள்ளனர்.


எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவருக்கு கல்வி கற்பிக்க சராசரியாக ரூ.10 லட்சம்தான் செலவாகிறது. ராணுவ மருத்துவக் கல்லூரியில் ரூ.6 லட்சம் செலவாகிறது.

அதே சமயம், ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர், முழு எம்பிபிஎஸ் படிப்புக்குமே ரூ.5 லட்சத்துக்குள்தான் கட்டணமாக செலுத்துகிறார்கள். இவர்களுக்கான கல்விக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மிகப்பெரிய தொகையை மானியமாக செலுத்துகின்றன.

மருத்துவக் கல்லூரிகளின் கல்விச் செலவை முழுவதும் ஆராய்ந்த பிறகு, ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் செலவாகவில்லை என்பதை கண்டறிந்தோம் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment