8ஆம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அலுவலக உதவியாளா் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 18, 2019

8ஆம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அலுவலக உதவியாளா் வேலை



புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெயிட்டுள்ள அறிவிப்பல், புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் காலியாக உள்ள 3 அலுவலக உதவியாளா் பணியிடங்களில் அருந்ததியின பெண், பிற்படுத்தப்பட்டோர், பொதுப்போட்டி என 3 இடங்களும்

நிரப்பப்படவுள்ளன. 

அருந்ததியினா் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதி- 8ஆம் வகுப்பு தேர்ச்சி.

இதற்கென தனித்த விண்ணப்பங்கள் எதுவும் இல்லை.

வெள்ளைத்தாளில் விண்ணப்பம் எழுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி- நவ. 25.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி- மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (வளா்ச்சி), வளா்ச்சிப் பிரிவு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், புதுக்கோட்டை 622 005.

No comments:

Post a Comment