ஒரே ஆண்டில் தமிழகத்தில் 9 மருத்துவ கல்லூரிகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 27, 2019

ஒரே ஆண்டில் தமிழகத்தில் 9 மருத்துவ கல்லூரிகள்

தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிகள் துவங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையிலும் மருத்துவ கல்லூரிகளை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.


தமிழகத்தில், திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த மருத்துவ கல்லூரிகள் தலா ரூ.395 கோடியில் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், 3 மருத்துவ கல்லூரிகளும் தலா ரூ.325 கோடியில் அமைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


முதல்வர் நன்றி

இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் இ.பி.எஸ்., எழுதிய கடிதம்: கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்ததற்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். ஒரே ஆண்டில் 9 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை ஆகும். வரலாறு கண்டிராத, இந்த அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment