மனிதனின் தலைமுடி மூலம் பயிர்களுக்கான உரம் தயாரிக்க முடியும் என கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகள் இருவர் நிரூபித்துள்ளனர்
.கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள பெலகாவி நகரை சேர்ந்த மாணவிகளான குஷிஅங்கோல்கர் மற்றும் ரெமினிக்கா யாதவ் ஆகியோர் அங்குள்ள கேந்திரியா வித்யாலயாவில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்
. இவர்கள் இருவரும் மனிதனின் தலை முடியில்இருந்து உரம் தயாரிக்கும் முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் இது குறித்த ஆராய்ச்சியை இவர்கள் மேற்கொண்டனர்.
இவர்களுக்காக பெலகாவியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிரடிஷனலின் விஞ்ஞானிகள் ஹர்ஷா , ஸ்ரீதேவி அங்காடி, பிரவின் யாதஹள்ளி மற்றும் சாந்தப்பா வரத் ஆகியோர் உதவினர்.முடிவில் தாவரங்கள் வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் முடியில் இருப்பதாகவும் அவை திரவ கரிம உரத்தை உற்பத்தி செய்வதாகவும் மாணவிகள் கண்டறிந்தனர்.
தொடர்ந்து அவர்கள் தக்காளி, முட்டைகோஸ், மிளகாய் போன்ற பயிர்களிடம் மேற்கொண்ட சோதனை அவர்களின் ஆராய்ச்சி வெற்றிக்கு வழி வகுத்தது. இதனையடுத்து மாணவிகள் இருவரும் தேசிய மாணவர்கள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாணவிகள் தங்களின் சோதனைகளை அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் செயல்படுத்தி சோதனை நடத்தினர்.
இதற்காக கல்லூரியில் கீரை தோட்டம் உருவாக்கினர். இதில் ஒரு பகுதியில் பாரம்பரிய உரமும், ஒரு பகுதியில் தங்களின் சோதனைக்கான தலை முடி உரமும் பயன்படுத்தினர்
. 45 நாட்களுக்கு பின்னர் பார்த்த போது அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது தலைமுடி மூலம் பயிரிடப்பட்டிருந்த கீரை பகுதி2.3 கிலோ எடை கொண்டதாகவும், பாரம்பரிய உரத்தை பயன்படுத்தப்பட்ட பகுதி 1.7 கிலோ மட்டுமே எடை கொண்டதாக இருந்தது.
இதனைதொடர்ந்து மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் வரும் 25 ம் தேதி நடைபெற உள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டியில் மாணவிகள் இருவரும் தங்களின் படைப்புகளை சமர்ப்பிக்க இருக்கின்றனர்.
No comments:
Post a Comment