தின கூலி தொழிலாளர்களாகப் பெண் பட்டதாரிகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 11, 2019

தின கூலி தொழிலாளர்களாகப் பெண் பட்டதாரிகள்

எம்.இ., எம்.பி.ஏ. போன்ற முதுகலை பட்டப் படிப்பு படித்த பல பெண்கள், நூற்பாலைகளிலும், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்களிலும் தின கூலி தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.


30 வயதுக்கு உள்பட்ட இவர்களின் வாழ்க்கை, இந்த நிலையிலேயே முடங்கிவிடாமல் இருக்க இந்தத் தொழில் நிறுவன வளாகங்களில் போட்டித் தேர்வுக்கான படிப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



தமிழகத்தில் 650 நூற்பாலைகளும், சிறியதும், பெரியதுமாக 10,000 க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இயங்குகின்றன.


 அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ளன
திருச்சி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. நூற்பாலைகள் தினமும் 3 ஷிப்டுகளும், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் 2 ஷிப்டுகளும் இயங்குகின்றன.


 நூற்பாலைகளில் ஒவ்வொரு ஷிப்டுக்கும் சுமார் 100 முதல் 500 பேர் வரை வேலை செய்கின்றனர். ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் ஷிப்டுக்கு 50 முதல் 200 பேர் வேலை செய்கின்றனர்.


தின கூலி தொழிலாளர்களாகப் பட்டதாரிகள்:



படிப்புக்கேற்ற வேலை என்பது கடந்த பல ஆண்டுகளாகவே எட்டாக்கனியாகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என்ற நிலைக்குப் படித்தவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்



. இதன் வெளிப்பாடாகத்தான் கடந்த 10 ஆண்டுகளில் நூற்பாலைகளிலும், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களிலும் உற்பத்திப் பிரிவில் தின கூலி தொழிலாளர்களாக எம்.இ., எம்.பி.ஏ., பி.எஸ்.சி., பி.ஏ. படித்துள்ள பட்டதாரி பெண்கள், நிறுவனங்களின் விடுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.



இந்தப் பெண்களின் வாழ்க்கை நிலை தொழிலாளர்கள் என்ற நிலையிலேயே முடங்கிவிடக் கூடாது. அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தன்னார்வப் பயிலும் வட்டம் என்ற போட்டித் தேர்வுக்கான படிப்பு மையம் உள்ளதுபோல், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ள ஆலைகளின் விடுதிகளில் போட்டித் தேர்வுக்கான படிப்பு மையத்தை ஆலை நிர்வாகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment