அரசுப் பணியிடத்தில் மேலதிகாரிகளை 'பாய்' என்று அழைக்கக்கூடாது என்று இளம் மற்றும் கீழ் அலுவலர்களுக்கு ஒடிசா மாநில அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அரசு அலுவலங்களில் மூத்த அதிகாரிகளுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, ஒடிசா அரசு ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு அலுவலகங்களில் மூத்த அதிகாரிகளை இளம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், 'பாய்' (இந்தியில் 'மூத்த சகோதரர்' என்று பொருள்) என்று அழைக்கக்கூடாது எனக் கூறியுள்ளது.
அதன்படி, அரசு அலுவலகங்களில் மூத்த அதிகாரிகளை இளம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், 'பாய்' (இந்தியில் 'மூத்த சகோதரர்' என்று பொருள்) என்று அழைக்கக்கூடாது எனக் கூறியுள்ளது.
அவ்வாறு கூறி, மூத்த அதிகாரிகள் புகார் அளிக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மூத்த அதிகாரிகளை சிலர் 'பாய்' என்று அழைப்பதாக வந்த புகாரை அடுத்தே, அதனைத் தடுக்க இது தொடர்பாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, மூத்த அதிகாரிகளை சிலர் 'பாய்' என்று அழைப்பதாக வந்த புகாரை அடுத்தே, அதனைத் தடுக்க இது தொடர்பாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அரசு அலுவலக நேரங்களில் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்றும் அலுவலத்திற்குள் தனிப்பட்ட உறவுமுறைகளை சொல்லி அழைக்கக்கூடாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment