குழந்தைகள் தினத்தையொட்டி ஒருநாள் தலைமை ஆசிரியராக பணியாற்றிய பள்ளி மாணவி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 13, 2019

குழந்தைகள் தினத்தையொட்டி ஒருநாள் தலைமை ஆசிரியராக பணியாற்றிய பள்ளி மாணவி

பந்தலூர் அருகே அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி ஆசிரியர்கள் மாணவர்களாகவும், மாணவர்கள் ஆசிரியர்களாகவும் நேற்று ஒருநாள் பள்ளியை நிர்வாகம் செய்தனர்


. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த முக்கட்டி அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் 100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். குழந்தைகள் தினத்தையொட்டி நேற்று ஒரு நாள் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் மாணவர்களாகவும் செயல்பட்டனர்.


இதில் 8ம் வகுப்பு மாணவி தர்ஷினி ஒருநாள் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். காலை இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, தினமும் திருக்குறள், பழமொழி உள்ளிட்டவைகளை ஆசிரியர்கள் சமர்ப்பித்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியராக செயல்பட்ட தர்ஷினி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அனைத்து பள்ளி மாணவர்களும்  தினமும் மாலை 3.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாணவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும், மாணவர்களோடு ஆசிரியர்களும் விளையாட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.


மேலும் மாணவர்களாக இருந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு காம்பவுண்ட் சுவருக்கு வெள்ளை அடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனர். இதில் எட்டாம் வகுப்பு மாணவி ஐஸ்வரியா ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தினார். மாணவர்களாக இருந்த ஆசிரியர்கள் மாணவி கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்து அசத்தினர்.

No comments:

Post a Comment