ஒரே அரசாணை: மாஸ் காட்டிய கல்வித்துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 26, 2019

ஒரே அரசாணை: மாஸ் காட்டிய கல்வித்துறை

தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது

 புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது.



அதே போல இதுவரை பள்ளிகளில்வியின் 10,11,12_ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு நேரம் 2.30 மணி_யாக இருந்தது மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக 30 நிமிடம் சேர்த்து 3 மணி நேரமாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

 மேலும் புதிய பாடத்திட்டம் வந்துள்ளதால் கூடுதலாக தேர்வு நேரத்தை ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று இந்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வில் கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது


.இந்நிலையில் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் SPOKEN ENGLISH பயிற்சிக்கு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆங்கிலப்பேச்சு திறன் பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் சொல்லப் படுகின்ற்றது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Click here to download PDF

No comments:

Post a Comment