ஆங்கிலம் தெரியாத 'ஆங்கில ஆசிரியை': கையும்-களவுமாக பிடித்த மாவட்ட நீதிபதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 30, 2019

ஆங்கிலம் தெரியாத 'ஆங்கில ஆசிரியை': கையும்-களவுமாக பிடித்த மாவட்ட நீதிபதி

ஆங்கிலத்தில் சில வரிகள் கூட படிக்கத் தெரியாமல் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியை பணியாற்றி வந்தது மாவட்ட நீதிபதியால் கண்டுபிடிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தின் சிகந்தர்பூர் சரௌஸி அரசுப் பள்ளியில் அம்மாவட்ட நீதிபதி தேவேந்திர குமார் பாண்டே, யாரும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென கடந்த 28-ஆம் தேதி ஆய்வு நடத்தினர். 

மேலும்
அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, அங்கிருந்த ஆங்கில ஆசிரியையிடம் 8-ஆம் வகுப்புக்கு ஆங்கிலப் புத்தகத்தை அளித்து வாசிக்க சொன்னார். ஆனால், சில வரிகளைக் கூட வாசிக்க இயலாமல் அந்த ஆசிரியை திணறினார்.


இதனால் கோபமடைந்த நீதிபதி, அங்கிருந்த கல்வி அதிகாரிகளிடம் கூறியதாவது,
ஒரு ஆங்கில ஆசிரியையாக இருந்துகொண்டு ஆங்கில மொழியை வாசிக்க தெரியவில்லை.


 எனவே அவர் உடனடியாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றார். மேலும் விளக்கமளிக்க வந்த ஆசிரியையை மறுத்து, எதுவாக இருந்தால் என்ன? நீங்கள் ஒரு பட்டதாரி. நான் உங்களிடம் அந்த வரிகளுக்கான அர்த்தத்தை விளக்குமாறோ அல்லது மொழியாக்கம் செய்யுமாறும் கூறவில்லை. அந்த வரிகளை வாசித்தால் போதும் என்று தான் கூறினேன் எனக் கோபமாகச் சாடினார்.


வடமாநிலங்களைச் சேர்ந்த பல ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமை தொடர்பான விடியோப் பதிவுகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருவது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment