அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஸ்மார்ட் கார்டு தயாரிப்பு பணி! துவங்கியது பள்ளிக்கல்வித்துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 20, 2019

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஸ்மார்ட் கார்டு தயாரிப்பு பணி! துவங்கியது பள்ளிக்கல்வித்துறை


அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கி இருக்கிறது.



தமிழக அரசுப் பள்ளிகளில் 3.2 லட்சம் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு வழங்குவதற்காக அவா்கள் குறித்த தகவல்களை வரும் 25-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் வருகை, அவர்களின் பணி நேரத்தை கணக்கிட க்யூஆர் கோடுடன்(QR) கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.


அதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. அதன்படி, அரசு பள்ளி ஆசியர்கள், பணியாளர்களின் முழு விவரங்கள், புகைப்படங்களை வரும் 25ம் தேதிக்குள் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.



அவ்வாறு ஆசியர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்யத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு பணிக்காக, 1.17 கோடி செலவாகும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment