தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது பிரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு நிறுவனங்களும் பல வித்தியாசமான திட்டங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், ஏர்டெல் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
அதன்படி, 599 ரூபாய் ரீசார்ஜ் செய்தால், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காப்பீடு 18 முதல் 54 வயது வரையிலான வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும் எனவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment