சி.பி.எஸ்.இ., தேர்வில் புதிய மாற்றங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 27, 2019

சி.பி.எஸ்.இ., தேர்வில் புதிய மாற்றங்கள்

தொழில் கூட்டமைப்பான, &'அசோசெம்&' சார்பில் டில்லியில் கல்வி தொடர்பான மாநாடு நடைபெறுகிறது.நிகழ்ச்சியில் பங்கேற்ற, சி.பி.எஸ்.இ., செயலர் அனுராக் திரிபாதி பேசியதாவது:


மாணவர்களின் படைப்பு திறன், பகுத்தாயும் திறன் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். அதன்படி, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது

. இந்தாண்டு, 10ம் வகுப்புக்கான தேர்வில், 20 சதவீத கேள்விகள் திறனறி அடிப்படையில் இருக்கும்.இதைத் தவிர, மாணவரின் படைப்புத் திறனை கண்டறியும் வகையில், 10 சதவீத கேள்விகள் இருக்கும்.


 இது படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2023ல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் -2 தேர்வில், மாணவரின் திறன்களை அடையாளம் காணும் வகையில், தேர்வு முறை இருக்கும்.தொழில்முறை பாடங்களை சந்தைப்படுத்தும் வகையில், மாற்றி அமைக்கப்படும்.

No comments:

Post a Comment