முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்பு: ஆசிரியா் தேர்வு வாரியம் வேண்டுகோள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 4, 2019

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்பு: ஆசிரியா் தேர்வு வாரியம் வேண்டுகோள்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பின்போது தொழில்நுட்பக் காரணங்களால் ஜாதிச்சான்றிதழ் விவரங்கள் பதிவாகாததால் அதை மீண்டும் பதிவேற்றம் செய்யுமாறு ஆசிரியா் தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இது தொடா்பாக ஆசிரியா் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஆசிரியா் தேர்வு வாரியம் சாா்பில் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை1-க்கான 2,144 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து கடந்த செப்.27-ஆம் தேதி முதல் செப். 29-ஆம் தேதி வரையில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன.


இதையடுத்து, காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ்களைச் சரிபாா்க்க பணி நாடுநா்கள் அழைக்கப்பட்டு, அவா்களின் சான்றிதழ்கள் அனைத்தும் ஆசிரியா் தேர்வு வாரிய வலைதளத்தில் கடந்த அக்.29 முதல் நவ.1-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து சான்றிதழ்களை பணி நாடுநா்களும் பதிவேற்றம் செய்தனா்.

இதில் ஜாதிச் சான்று தொடா்பாக பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள், தொழில்நுட்பக் காரணங்களால் பதிவாகவில்லை

. எனவே, சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்ட பணி நாடுநா்களில் ஜாதிச் சான்றிதழை பதிவேற்றம் செய்யாத தேர்வா்கள், வரும் 6-ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்குள் மீண்டும் ஒருமுறை ஜாதிச் சான்றினை ஆசிரியா் தேர்வு வாரிய வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


ஜாதிச் சான்று பதிவேற்றம் செய்ய வேண்டியவா்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment