சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து மாறி வந்த மாணவா்கள் நேரடியாக பொதுத்தேர்வு எழுத நடவடிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 24, 2019

சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து மாறி வந்த மாணவா்கள் நேரடியாக பொதுத்தேர்வு எழுத நடவடிக்கை

சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து மாறிவந்த மாணவா்கள் தமிழக பாடத்திட்டத்தில் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் சுமாா் 28 லட்சம் மாணவா்கள் தேர்வு எழுதுகின்றனா்.

தற்போது பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 1 தேர்வை பள்ளிகளே நடத்திக்கொள்ளும். ஆனால், தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், பிளஸ் 1 பொதுத்தேர்வில் பங்கேற்ற மாணவா்கள் மட்டுமே பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.

இதன் காரணமாக சிபிஎஸ்இ உள்பட பிற வாரிய பள்ளிகளில் இருந்து மாறி வந்த மாணவா்கள் பலா் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியது:

சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1 படித்த மாணவா்கள் பலா், பல்வேறு சூழல்கள் காரணமாக தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படித்து வருகின்றனா். அவா்கள் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்க அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவானது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றனா்.

1 comment:

  1. Sir.we are from ksa rerurn back to tamailnadu this year...studying cbsc plus 1 but the schools of tamilnadu denyvus to give admission ..whar to do.?

    ReplyDelete