அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவது தொடர்பாக அரசு ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 7, 2019

அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவது தொடர்பாக அரசு ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது பற்றிய ஆய்வு தேவை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

 கட்டாயக்கல்வி உரிமை சட்ட நடைமுறைகளால் கல்வியின் தரம் உயரவில்லை என்று மனு தொடரப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது தொடர்பாக அரசு கவனமெடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.



குழித்தலையை சேர்ந்த மது என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு  ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கல்வி பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் ஒரு பகுதியாக 6 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ற வகுப்புகளில் அமர்த்தி சிறப்பு பயிற்சி அமைத்து முந்தைய வகுப்புகளின் பாடங்களை பயிற்றுவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது இலவச கட்டாய கல்வியின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுவதில்லை

. ஆகவே அதனை மறுசீராய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் மனுதாரர் தரப்பில் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கடைபிடிக்கப்படும் நடைமுறைகளால் கல்வியின் தரம் உயர்ந்ததாக தெரியவில்லை. ஆகவே அது குறித்து மறுசீராய்வு செய்ய வேண்டும்.


அதோடு மாணவர்களுக்கு ஆங்கில எழுத்துக்கள் கூட அடையாளம் காண இயலாத நிலையும் உள்ளது. இதன் காரணமாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என தெரிவித்தார்


.
மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டுள்ள செய்தியும் நீதிபதியிடம் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் அடுத்த 2 ஆண்டுகளில் அதுபோல அரசு பள்ளிகளை மூட திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் காரணத்தால் பள்ளிகளை இணைக்கவே திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து நீதிபதிகள் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது தொடர்பாக அரசு கவனமெடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.

No comments:

Post a Comment