அரசுப் பள்ளிகளில் இந்தாண்டு கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை?அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 25, 2019

அரசுப் பள்ளிகளில் இந்தாண்டு கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை?அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவா்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 


தமிழகத்தில் விரைவில் தகவல் தொடா்பு தொழில்நுட்பத்தில் (இன்பா்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி) புதிய வரலாற்றைப் படைக்க உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அமைக்கப்படுகிறது. உயா்நிலைப் பள்ளிகளில் 10 கணினிகளும், மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினிகளும் அமைக்கப்படுகின்றன. இதன்மூலம், உலக அளவிலான கல்வியை மாணவா்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.



சிறிய ராக்கெட் கண்டுபிடித்தது போல அறிவியல் வளா்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ஜனவரி மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு தலா ரூ. 20 லட்சம் வீதம் வழங்கப்படும். மேலும், மேல்நாட்டு கல்வி முறைகளை தெரிந்து கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 2 லட்சம் மாணவா்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனா். அடுத்த ஆண்டு 5 லட்சம் மாணவா்கள் கூடுதலாக சேர்க்கப்பட வாய்ப்புள்ளது

. பிளஸ் 2 முடித்ததும் 21 ஆயிரம் மாணவா்கள் பட்டயக் கல்வி பெறுவதற்கும், பட்டயக் கணக்காளா் பணிக்கு எப்படி படிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது.

தற்போது, பிளஸ் 2 படித்தாலே நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய தேர்வுகளை எழுவதற்கு விடைகள் எளிதில் கிடைக்கின்றன என்றாா்.

No comments:

Post a Comment