தமிழகம் முழுவதும் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை சிறப்பு தேர்வு மூலம் உதவி பேராசிரியர்களாக நியமிக்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். குறிப்பாக 4 ஆயிரத்து 54 பேர் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், அவர்களுக்கான ஊதியத்தை யூ.சி.ஜி விதிகளின் படி உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் உள்ளது.
முக்கியமாக அவர்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியார்ப்பவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் இருக்கின்றன. இந்த சூழலில் அவர்களுக்கான வழிமுறையை உயர்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக கூறிவந்தது.
அந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக 647 உதவி பேராசிரியர் பணியிடங்களை கவுரவ விரிவுரையாளர்களை வைத்து நிரப்ப அரசு பரிசீலித்து வருகிறது. அதிலும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விதிகளின் அடிப்படையிலான ஒரு சிறப்பு தேர்வு நடத்தி அதன் மூலமாக 647 உதவி பேராசிரியர் பணியிடங்களை நியமிக்க உயர்கல்வித்துறை முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து பணி அனுபவம் எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளுடன் கூடிய அரசாணை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி வருகின்றனர்
No comments:
Post a Comment