ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை போலவே ஜியோவும் சேவைக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
கடந்த காலாண்டில் ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் கடும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக சேவை கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.இந்நிலையில், ஜியோ நிறுவனமும் சேவை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மற்ற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களைப் போல தங்கள் நிறுவனமும் சேவைக் கட்டணத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி உள்ளது.
இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறியுள்ள ஜியோ நிறுவனம் கட்டண உயர்வு தொடர்பாக டிராயுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் இணையதள பயன்பாட்டையும், டிஜிட்டல்மய வளர்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில், முதலீடுகளை நிலைநிறுத்துகிற வகையிலும் இந்த கட்டண உயர்வு அமையும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment