அமேசான், கூகுள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 1, 2019

அமேசான், கூகுள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு!

அமேசான், கூகுள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.


அனிதாப்.ஆர்க் என்ற தனியார் நிறுவனம் நடத்தும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 6-8 தேதிகளில் பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது


. படித்த பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கவும், பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரு முயற்சியாகவும் இது மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கூகுள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், அமேசான், கோல்ட்மேன் சாச்ஸ், வெஸ்டர்ன் டிஜிட்டல், வெல்ஸ் பார்கோ, நெட்ஆப், ஆரக்கிள், எஸ்ஏபி, கிரெடிட் சூயிஸ் மற்றும் அடோப் உள்ளிட்ட 50 முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.

கம்ப்யூட்டிங், ஐடி மற்றும் பொறியியல் துறையில் உள்ள பெண் வல்லுநர்கள் மற்றும் மாணவிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று நேரடியாக அந்தந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறலாம்.


இந்த நிகழ்வு 'கிரேஸ் ஹாப்பர் செலிபிரேஷன் இந்தியா 19' (Grace Hopper Celebration India 19) என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதற்கு பெண் கணினி விஞ்ஞானி மற்றும் முன்னாள் அமெரிக்க கடற்படை ஊழியரான கிரேஸ் ஹாப்பரின் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment