பள்ளிக்கல்வித்துறைக்கு என தனி ஆணையர் பதவி உருவாக்கப்பட்டிருப்பது புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதின் ஒரு அங்கம் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது.
முதல்முறையாக தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ஆணையர் என்கிற புதிய பதவி உருவாக்கப்பட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில்
சிஜி தாமஸ் வைத்யன் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆணையரின் பணிகள் என்ன? என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.
ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையில் கல்வித்துறை முதன்மை செயலாளர் உட்பட 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியாற்றி வரக்கூடிய நிலையில், 7வது ஐஏஎஸ் அதிகாரியாக சிஜி தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
1986-ம் ஆண்டு புதிய கொண்டு வரப்பட்ட
புதிய கல்வி கொள்கையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து கல்வி சார்ந்து விஷயங்களில் செயல்படுவது அவசியம் என்றும் அதற்கேற்ப IES எனப்படும் Indian education service எனப்படும் புதிய துறையை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் புதிய வரைவு கல்விக் கொள்கையில், IES எனப்படும் "இந்தியன் எஜுகேஷனல் சர்வீஸ்" என்ற பதவி ஏற்படுத்தப்பட்டு, அந்த அதிகாரியின் கீழ் ஒட்டுமொத்த கல்வித்துறையும் கொண்டுவரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய வரைவு கல்விக்கொள்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதன் அடிபடியிலேயே தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் என்கிற புதிய பதவியை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையில் ஏற்கனவே போதுமான எண்ணிக்கையில் அதிகாரிகள் இருந்தாலும், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, கல்வித்தரம், மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளிகள் எண்ணிக்கை இவையெல்லாம் அதிகரிக்காமல் இருப்பதும், குறிப்பாக மாணவர் எண்ணிக்கை சரிவால் , அரசு பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
7 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 க்கும் அதிகமான இயக்குனர்கள், 20 க்கும் அதிகமான இணை இயக்குனர்கள், மாவட்ட அளவில் 100 க்கும் அதிகமான அதிகாரிகள் இருந்தும் மாணவர் சரிவையோ பள்ளிகள் மூடப்படுவதையோ தடுக்க இயலவில்லை.
இந்த நிலையில் புதிய ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமணம் எதற்காக என்கிற கேள்வியும் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது என்கிற எதிர்ப்பார்ப்பும் அனைவரது எண்ணங்களிலும் எழுந்துள்ளது.
Source:news18

No comments:
Post a Comment