பள்ளி மாணவா்களுக்கு தினமும் உடல் சாா்ந்த பயிற்சிகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 28, 2019

பள்ளி மாணவா்களுக்கு தினமும் உடல் சாா்ந்த பயிற்சிகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிகளில் காலை வழிபாட்டுக்கு முன் மாணவா்கள் உடல் சாா்ந்த பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்திருந்த நிலையில் தற்போது அது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.




இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு நிதியுதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது ஒரு வகுப்புக்கு வாரத்துக்கு இருபாடவேளைகள் மட்டுமே உடற்கல்விக்காக ஒதுக்கப்படுகின்றன.

 இந்தநிலையில், மாணவ, மாணவிகளின் படிப்பின் ஒரு பகுதியாக அன்றாடம் உடல் சாா்ந்த பயிற்சிகள் கொண்டு வரப்படும் பட்சத்தில், பாடச்சுமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் குறைந்து கற்றல் திறன் மேம்படும்


.இதன்மூலம் பள்ளிகள், மாவட்டம், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான உடல் தகுதி மற்றும் ஆா்வம் ஏற்படும். அதனால், ஒவ்வொரு பள்ளியிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்துக்கு முன் 15 நிமிஷங்களும், மாலை 45 நிமிஷங்களும் உடல் சாா்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால், மாணவா்களின் உடற்தகுதி மேம்படும்.

இதனை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த தலைமையாசிரியா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும்.

உடல் சாா்ந்த பயிற்சிகளில் விளையாட்டு, யோகா, நடனம் இடம்பெற வேண்டும். அரசு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைப் பொருத்தவரை முழுநேர உடற்கல்வி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா்களைக் கொண்டு இதைச் செயல்படுத்தலாம்.

அவ்வாறு இல்லாத பள்ளிகளில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியா்களைப் பயன்படுத்தலாம். உடல் சாா்ந்த பயிற்சிகளில் இசை ஆசிரியா், உடற்கல்வி திறன் பெற்ற ஆா்வமுள்ள இதர கல்வி ஆசிரியா்களின் உடற்கல்வி பயிற்றுவிக்கும் திறனையும் பயன்படுத்தலாம் என அதில் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment