வேலூர் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஊராட்சி செயலாளர்
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.15,900
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி அருந்ததியினா், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்கள் 35 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்களுக்கும் அழைப்புக்கடிதம் விண்ணப்பத்தாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.vellore.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி), ஆலங்காயம் வட்டாரம், வேலூர் மாவட்டம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 25.11.2019
No comments:
Post a Comment