அடுத்த அதிரடி:முதல்வன் பட பாணியில் லஞ்சம், ஊழல் புகார் அளிக்க தொலைபேசி எண்: முதல்வர் ஜெகன்மோகன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 25, 2019

அடுத்த அதிரடி:முதல்வன் பட பாணியில் லஞ்சம், ஊழல் புகார் அளிக்க தொலைபேசி எண்: முதல்வர் ஜெகன்மோகன்

ஆந்திர மாநிலத்தில் லஞ்சம், ஊழல் புகார் அளிக்க இலவச அழைப்பு எண்ணை முதல்வர் ஜெகன்மோகன் வெளியிட்டார். ஆந்திர மாநில அரசு, ஊழலற்ற, வெளிப்படையான அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


 ஏற்கனவே ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வருவதற்காக அனைத்து கிராமங்களிலும் கிராம செயலகம்,  நகரப் பகுதிகளில் வார்டு செயலகம் அமைக்கப்பட்டுள்ளது.குண்டூர் மாவட்டம், வெலகம்புடியில் உள்ள முதல்வரின் கேம்ப் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன், பொதுமக்கள் ஊழல் குறித்த புகார்களை தெரிவிப்பதற்காக இலவச அழைப்பு எண்ணை 14400 நேற்று வெளியிட்டார்.


 பின்னர் அந்த எண்ணிற்கு போன் செய்து செயல்படும் முறைகளை கேட்டு தெரிந்து கொண்டதோடு ஆலோசனைகளையும் வழங்கினார். அப்போது முதல்வர் பேசியதாவது: 14400 என்ற கால் சென்டர் எண் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது.புகார் அளித்தவுடன் விவரமும் புகாரை சேகரித்த ஊழியரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்


. கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு எந்த கம்ப்யூட்டரிலிருந்து லாகின் செய்யப்பட்டது என்பதை அதிகாரிகள் தெரிந்து கொள்ளும் விதமாகவும் வைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக கால் சென்டர் கொண்டுவரப்பட்டுள்ளது.

 புகார்கள் வந்தவுடன் அதனை பரிசீலிப்பதோடு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் அந்த மனுக்கள் மீது உரிய தீர்வு காணும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

No comments:

Post a Comment