பழைய சைக்கிளை வைத்து, புதிய கருவி: அரசு பள்ளி மாணவி அசத்தல்..! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 3, 2019

பழைய சைக்கிளை வைத்து, புதிய கருவி: அரசு பள்ளி மாணவி அசத்தல்..!

கடந்த 31 ஆம் தேதி அமைச்சர் செங்கோட்டையன் துவங்கி வைத்த 47வது ஜவஹர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல், கணித ,சுற்றுச்சூழல் கண்காட்சி 3 தினங்களாக கரூரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார்கள்.


சிலர், தங்களுடைய வித்தியாசமான படைப்புகளையும் அதில் இடம்பெற செய்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், நந்திவனம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த முத்துலெட்சுமி என்ற 8 ம் வகுப்பு மாணவி தன்னுடைய படைப்பை சமர்ப்பித்தார்.

அதில், பழுதான சைக்கிள்களை சேகரித்து உடல் எடையை குறைக்கும் வகையில், ஒரு வித கருவி மற்றும் அத்துடன் மின்சாதன பொருட்களை சார்ஜ் செய்யும் வகையிலும் தயாரித்து அசத்தியுள்ளார்.


இதனை தொடர்ந்து இந்த மாணவி 5 ம் இடம் பிடித்து தென்னிந்திய அளவிலான கண்காட்சிக்கு தேர்வு பெற்றார். இந்த புதுவிதமான கண்டுபிடிப்பு அனைவரையும் ஈர்க்கும் விதமாக அமைந்தது.

இதுபோலவே கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரதீப்குமார், பயோ மெட்ரிக் முறையில் முதலிடம் பிடித்துள்ளதாகவும் பெங்களூரு தேசிய அருங்காட்சியகத்தின் மூத்த கல்வி அலுவலர் பரதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment