துணியிலிருந்து மின்சாரம் தயாரிப்பு : ஐஐடி மாணவர்கள் அசத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, November 3, 2019

துணியிலிருந்து மின்சாரம் தயாரிப்பு : ஐஐடி மாணவர்கள் அசத்தல்

திறந்த வெளியில் உலர்த்தப்படும் துணிகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மேற்குவங்கத்தின் காரக்புர் ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இந்த தொழில்நுட்பம் குறித்து ஐஐடி பேராசிரியர் சுமன் சக்ரவர்த்தி கூறுகையில், துணிகள் செல்லுலோஸ் பைபர்களால் ஆனது. அவற்றின் சுவர்களில் மின் அணுக்கள் இருக்கும்.


சிறிய அளவிலான துணியை உப்பு கரைசலில் நீங்கள் மூழ்க வைத்தால், அதில் உள்ள பைபர் மற்றும் அயனியாக்க துகள்களால் அந்த துணி மிதக்கும். அவை தொடர்ந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.


இதை மின் சேமிப்பானுடன் இணைக்கும் போது சிறிய அளவில் மின்சாரத்தை சேமிக்க முடியும்.சலவை தொழிலாளிகள் துணியை உலர்த்தும் முறையை கொண்டு இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கினோம்.

இந்த மின்சாரம் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்காது. ஆனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மாற்ற நிச்சயம் போதுமானதாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment