புதுச்சேரி திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் பாவேந்தர் பாரதி தாசன் என்னும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை சுமார் 450 மாணவர்கள் பயின்று வருகின்றனர்
. இதில் 16 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் சசிகுமார் மாதம் ஒரு முறை பள்ளியின் கழிவறை, கண்ணாடி உள்ளிட்ட அனைத்தையும் முழுவதுமாக தூய்மை செய்வாராம்.
என்ன தான் பணியாட்கள் சுத்தமாகக் கழிவறையை வைத்திருந்தாலும் அவரே சென்று தூய்மையாக உள்ளதா என்று சரிபார்த்து வருகிறார்.இவர் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார்
.அதுமட்டுமின்றி, பாவேந்தர் பாரதி தாசன் பள்ளி தூய்மையில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து "தூய்மைப் பள்ளி" (ஸ்வச் வித்யாலயா) என்னும் விருதையும் பெற்றுள்ளது. இந்த விருதின் பெரும்பங்கு இவரையே சாரும்
.இது குறித்து சசிகுமார் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், " கழிவறையைத் தூய்மையாக வைத்திருக்கும் விழிப்புணர்வை நாங்களும் எங்களது மாணவர்களும் கடைப்பிடித்து வருகிறோம். கழிவறைக்குச் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் குறித்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளோம்.
கழிவறையைத் தூய்மையாகப் பராமரித்து வருகிறோம். இருப்பினும், மாதம் ஒரு முறை நானே சென்று அனைத்தையும் சுத்தம் செய்து விடுவேன் " என்று இயல்பாகத் தெரிவித்துள்ளார்.மாணவர்களுக்கு ஆரம்ப பள்ளி முதலே கழிவறையைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லித் தருவது அனைத்து பள்ளிகளிலும் வழக்கமே.
ஆனால், அவரே சுத்தம் செய்து கழிவறைகளைத் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைப்பது மிகப் பெரிய தூண்டுகோலாக அமைகிறது.

No comments:
Post a Comment