இனி டிக்டாக் மூலமாகவும் ஷாப்பிங் செய்யலாம்... - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 18, 2019

இனி டிக்டாக் மூலமாகவும் ஷாப்பிங் செய்யலாம்...


பிரபலமான டிக்டாக் செயலி விரைவில் ஆன்லைன் ஷாப்பிங் தளமாகவும் வளர உள்ளது.

சின்ன வீடியோக்களை ஷேர் செய்யும் ஒரு தளமாக இருந்த டிக்டாக் செயலி, தற்போது ஆன்லைன் விற்பனைத் தளமாக்க சோதனை மேற்கொண்டு வருகிறது. வீடியோ மூலம் பொருட்களை வாங்கும் வகையிலான முறையும் அமலாகலாம் எனக் கூறப்படுகிறது.


வீடியோ மூலம் விற்கப்படும் ஒரு பொருள் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் மூலம் பயனாளர் அப்பொருளை வாங்கும்படி இத்தளம் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

 மேலும், ஆன்லைன் பேமன்ட் முறைகளை வலிமையாக்க சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.டிக்டாக் செயலி சர்வதேச அளவில் 1.5 பில்லியன் டவுன்லோடுகளைப் பெற்ற ஒரு செயலி ஆகும்.


 சமீபத்தில் கூட டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான பைட்டான்ஸ் ஒரு ஸ்மார்ட்போனை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியது 
குறிப்பிடத்தக்கது.

டிக்டாக் சீனாவின் கையாள் எனப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அத்தனையையும் மறுத்து வருகிறது டிக்டாக்.

No comments:

Post a Comment