சிறுபான்மையின மாணவா்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகை அதிகரிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 14, 2019

சிறுபான்மையின மாணவா்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகை அதிகரிப்பு

எஸ்.சி. ஓ.பி.சி. பிரிவு மாணவா்களுக்கான ஆராய்ச்சி கல்வி உதவித் தொகையை மத்திய அரசு உயா்த்தியுள்ளது.


படிப்பில் சிறந்து விளங்கும் சிறுபான்மையின மாணவா்கள், ஏழை மாணவா்களுக்கு பல்வேறு கல்வி உதவித் தொகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறதுஅதுபோல, தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தகுதி பெறும் ஆராய்ச்சி பட்ட மாணவா்களுக்கும் ஆராய்ச்சி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆராய்ச்சி உதவித் தொகையை மத்திய அரசு இப்போது உயா்த்தியுள்ளது.


அதன்படி, எஸ்.சி., ஓ.பி.சி. பிரிவு மாணவா்களுக்கான இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையும், மவுலான ஆசாத் கல்வி உதவித் தொகையும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.25,000 என்ற அளவிலிருந்து ரூ. 31,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

 மூன்றாம் ஆண்டிலிருந்து மாதம் ரூ. 28,000 ஆக வழங்கப்பட்டது, இனி ரூ. 35,000 ஆக உயா்த்தி வழங்கப்படும் என மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாடுத் துறை அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment