ஆசிரியர்களுக்கு பின்லாந்து நிபுணர்கள் பயிற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 27, 2019

ஆசிரியர்களுக்கு பின்லாந்து நிபுணர்கள் பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பின்லாந்து நாட்டின் நிபுணர்கள் வாயிலாக, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழக பள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஏற்கனவே புதிய பாட திட்டம், தேர்வு முறையில் மாற்றம் போன்றவை அமலுக்கு வந்துள்ளன. புதிய பாட திட்டத்தின் படி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டமும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


துவக்கம்

இந்த வரிசையில், அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் திறன்களை மையப்படுத்தி, கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் வகையில், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன


. இதற்காக, பின்லாந்து நாட்டில் இருந்து, நான்கு பேர் குழுவினர், சென்னைக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர். பின்லாந்து குழுவினரின் சிறப்பு பயிற்சி வகுப்பு, பள்ளி கல்வி இயக்குனரகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று துவங்கியது.

 இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, 'பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்' வழியாக, பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை படிப்படியாக, மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment