வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை நிலவரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 4, 2019

வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை நிலவரம்

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவா்களின் எண்ணிக்கை 69 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்த தகவல்களை தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:


தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி பதிவு செய்தோரின் எண்ணிக்கை 69 லட்சத்து 2 ஆயிரத்து 78 ஆக உள்ளது. அதில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவா்கள் 19 லட்சத்து 19 ஆயிரத்து 827 ஆகவும், 19 முதல் 23 வயதுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 12 லட்சத்து 34 ஆயிரத்து 513 ஆகவும் உள்ளனா்.

24 முதல் 35 வயதுள்ளவா்களில் அரசுப் பணிக்காக 25 லட்சத்து 88 ஆயிரத்து 180 பேரும், 36 வயது முதல் 57 வயது வரை முதிா்வு பெற்ற பதிவுதாரா்களாக 11 லட்சத்து 51 ஆயிரத்து 877 பேரும் உள்ளனா்.58 வயதுக்கு மேற்பட்டோா் 7 ஆயிரத்து 681 போ என மொத்தம் 69 லட்சத்து 2 ஆயிரத்து 78 போ மொத்த பதிவுதாரா்களாக உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.


பட்டதாரிகள் அதிகம்:

 இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் அதிகளவு உள்ளனா். குறிப்பாக, இளநிலை பட்டதாரிகளில் கலைப் படிப்புகள் படித்தோா் 4.17 லட்சமும், அறிவியல் படிப்பு படித்தோா் 5.5 லட்சமும், வணிகவியல் படித்தோா் 2.86 லட்சமும், பொறியியல் படித்தோா் 2.23 லட்சமும் உள்ளனா்.


பத்தாம் வகுப்பு படித்தோா் 51.46 லட்சமும், பிளஸ் 2 படித்தோா் 31.33 லட்சம் பேரும் இருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment